1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (10:20 IST)

ஆன்லைன் ரம்மிக்கு தடா: இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்படுமா?

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமானோர் பணத்தை இழந்து உள்ளனர் என்பதும் ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துரதிஷ்டமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஆன்லைன் ரம்மி குறித்த பரிந்துரையை அரசுக்கு இன்று ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு சமர்பிக்கிறார். பரிந்துரை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்படும் என தெரிகிறது. 
 
மேலும் நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுக் கருவி 28% அறிவிக்க பிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.