திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (10:30 IST)

வெளியானது தேர்வு முடிவுகள்... மாணவர்களை முந்திய மாணவிகள்!!

தமிழகம், புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு முதலாக மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 10,11,12ம் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து நேரடியாக பொதுத்தேர்வு நடைபெற்றது.
 
இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியான நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்று முன் ஆன்லைனில் வெளியானது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.
 
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,43,675 பேர் எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்  மாணவிகள் 94.99%, மாணவர்கள் 84.86% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் போல மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
அதோடு மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 80.02% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்ட கடைசி இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.