1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin comment against tn governor talk

ஆளுநர் உரையை வச்சி தவெக ரீல்ஸ் போடலாம்.. ஒன்னுமில்ல!.. உதயநிதி பேட்டி...

udhyanidhi
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் தமிழக சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு ஆளுநர் 39 நிமிடம் உரையாற்றினார். 4 ஆண்டுகளுக்கு பின் ஆளுநர் ஒரு முழு உரையாற்றிய நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கிறது. அதிலும், தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் அப்படியே வாசித்தார். அவற்றில் பல கருத்துக்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகள்தான் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது. திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி விட்டு ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக அரசின் மீது போட்டுள்ளனர். ஆளும் கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டன் மெட்டீரியலாக மட்டுமே இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது’ எனவும் அவர் கூறினார்.

அதோடு ‘கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், நான்கு சாதிய ஆவண படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. சிறு குழந்தைகள், பள்ளி சிறுமிகள், வேலைக்கு போகும் பெண்களுக்கு நடக்கக்கூடிய கொடுமைகளை பற்றி சொல்ல முடியலையே என்று அப்போது எங்கள் தலைவரை பார்த்து கூறிய சி.எம் விஜய் இப்போது எங்கே போனார்?’ எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
வேதாந்தா பவர் பங்குகள் அதிரடி உயர்வு: புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை