சர்ச்சையை தவிர்த்த தவெக!.. தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கிய சட்டசபை!..
கடந்த திமுக ஆட்சியில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே ஏழாம் பொருத்தமே நீடித்து வந்தது. அப்போது ஆளுநராக இருந்த ரவி திமுக அரசோடு பல விஷயங்களிலும் முரண்பட்டார்.
குறிப்பாக சட்டசபையில் ஆளுநர் ரவி உரையாற்ற வரும்போது முதலில் தேசிய கீதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஆளுநரின் குரலாக இருந்தது.
ஆனால் திமுக அரசு அதை அனுமதிக்கவில்லை. தமிழ்த்தாய் மட்டுமே முதலில் ஒலிக்கப்படும் என கூறிவந்தது. இதை ஏற்காமல் பல முறை ஆளுநர் ரவி உரையாற்றாமலேயே வெளிநடப்பு செய்திருக்கிறார். இந்நிலையில்தான் தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் 17வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று சட்டசபையில் துவங்கியது.
இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநரின் உரையோடு இன்று துவங்கியது. அப்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின் இரண்டாவதாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சையை தவெக அரசு தவிர்த்துவிட்டது. இல்லையெனில், இதையே காரணம் காட்டி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்க வாய்ப்புண்டு,