முதல்வர் விஜயை சந்தித்த சமந்தா!.. வைரல் புகைப்படங்கள்!..
திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார் விஜய். இது திரைத்துறை சார்ந்த பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்த போது ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் பலரும் இருந்தனர்.
ஆனால், விஜய் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. மக்களின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவரின் தவெக கட்சி 108 தொகுதியில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைந்திருக்கிறது. இதையடுத்து தினமும் மாலையில் முதல்வர் விஜயின் நீலாங்கரை வீட்டில் திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது..
சமீபத்தில் கூட சிம்பு, சினேகா, சிம்ரன் ஆகியோர் விஜயை சந்தித்தனர். இந்நிலையில்தான் விஜயுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை சமந்தா இன்று மாலை விஜயின் நீலாங்கரை வீட்டில் அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.