வாயை திறந்து பேசுங்க சி.எம்!.. சட்டசபையில் திமுக அட்ராசிட்டி!...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெகவின் தலைவர் விஜய் முதல்வராகியிருக்கிறார். விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று 45 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த 45 நாட்களில் டாஸ்மாக் கடைகள், சட்ட ஒழுங்கு, பெண்கள் மீதான பாதுகாப்பு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநரின் உரையோடு இன்று துவங்கியது. சட்டமன்றத்துக்கு உரையாற்ற வந்த ஆளநர் அர்லேகருக்கும், முதலமைச்சருக்கும் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. ஆளுநரை செங்கோட்டையன், சட்டமன்ற செயலர் சாந்தி, சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் ஆகியோர் வரவேற்றனர்.
ஒருபக்கம், உதயநிதி தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் கதறல் கேட்குதா சி.எம், ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே.. மாஸ்டர் வாயில் பிளாஸ்டர் என்கிற வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையில் ஏந்தியபடி சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள். எனவே, சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.