1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn governor arlekar reflected tvk govt voice

ஆளுநர் பேசுறதுலாம் நிஜம்தானா!. சட்டசபையில் ஆச்சர்யம்!.. சாதித்து காட்டிய தவெக!..

vijay
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை துவங்கியது. இதில், அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டனர்.

அப்போது சட்டசபையில் உரையாற்றிய தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே படித்தார். தமிழ்நாட்டிற்கு வையான நிதியை பகிர்வதில் ஒன்றிய அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒன்றிய அரசிடமிருந்து நிதியை கேட்டுப் பெற ஒரு குழு அமைக்கப்படும். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு காட்டுகிறது. சட்ட நடவடிக்கை தொடரும்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி என்பதை ஏற்க முடியாது. தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என அவர் பேசினார். திமுக ஆட்சி காலத்தில் இதையெல்லாம் திமுக சொல்லும். ஆனால், ஆளுநர் எந்த கருத்தும் சொல்லமாட்டார்.

ஏனெனில், ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே பின்பற்றும் ஒரு நபர்தான். ஆனால், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் பேசியிருப்பது ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆளுநரின் உரை குறித்து சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள் ‘ஆளுநர் தான் யார் என்பதை மறந்து ஒரு தவெக எம்.எல்.ஏ போல பேசியிருக்கிறார்’ என கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிலரோ ஒன்றிய அரசு தவெகவுக்கு ஆதரவாக நிற்பதைத்தான் இது காட்டுகிறது என்றும் சொல்ல துவங்கியிருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
வெள்ளை அறிக்கை வெளியீடு.. திமுகவுக்கு ஆதரவாக மாறினார்களா அதிகாரிகள்? கடுங்கோபத்தில் முதல்வர்?