1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay conduct meeting about free bus

மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து திட்டம்!.. விஜய் அவசர ஆலோசனை!...

cm vijay
கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்தது. தற்போது வரை அந்த திட்டம் தொடர்கிறது. 2026 தேர்தல் நடப்பதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த தமிழக வெற்றிக் கழகம் பெண்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்தில் இலவசம் என அறிவித்தது. ஆனால் தற்போது வரை அதை நடைமுறைக்கு வரவில்லை..

நேற்று செய்தியாகிடம் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் ஓடுவதாகவும் ஒரு கிலோமீட்டருக்கு 50 ரூபாய்க்கு மேல் தமிழக அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது எனவும் கூறியிருந்தார். இதையடுத்து,  மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து திட்டம் அமுலுக்கு வருமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் மாநில முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் இன்று ஈடுபட்டார்..
அடுத்த கட்டுரையில்
புது மனைவியை கண்காணிக்க சிசிடிவி மாட்டிய டாக்டர் கணவர்.. திருமணமான 48 நாளில் நடந்த விபரீதம்...