தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் இருவர் கைது.. மொத்தம் 14 பேர் கைது..
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.2.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
