ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் தோறும் ரீசார்ஜ் செய்யும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு வருட திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் ரூ. 3,599 மதிப்புள்ள ஆண்டு திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 365 நாட்களுக்கு தடையற்ற சேவையைப் பெற முடியும்.
இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் தினமும் 100 எஸ்சிஎம்எஸ் மற்றும் 5ஜி வசதி உள்ள பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற சிறப்பம்சங்கள் கிடைக்கின்றன.
இது தவிர, 3 மாத ஜியோஹாட்ஸ்டார் சந்தா, 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ போன்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு சேவைகளும் கூடுதல் பலன்களாக வழங்கப்படுகின்றன.
அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு ரூ. 3,599 திட்டமும், கூடுதல் டிஜிட்டல் சேவைகளுடன் ரூ. 3,999 திட்டமும் சிறந்த தேர்வாக அமைகின்றன. குறைந்த விலையில் நீண்ட கால செல்லுபடியாகும் தன்மையை விரும்புவோருக்கு ரூ. 3,336 திட்டமும், அழைப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு ரூ. 2,025 திட்டமும் ஜியோ தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
