1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk ministry going to expand tomorrow

விஜய் அமைச்சரவை நாளை விரிவாக்கம்!.. விசிக, ஐ.யூ.எம்.எல். இடம் பெறுமா?..

vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது. தவெக தலைவர் முதல்வராக மாறியிருக்கிறார். விஜய் முதல்வராக பதவியேற்ற போது செங்கோட்டையன் சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன், அருண் ராஜ் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  ஆனால் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது..

சமீபத்தில் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய்க்கு 16 துறையில் ஒதுக்கப்பட்டது. அதேநேரம் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெறவேண்டும் என விஜய் முடிவெடுத்திருக்கிறார். குறிப்பாக விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விஜய் விரும்புகிறார்.

இந்த தகவலை இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறினார். விசிகவும், இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியும் தங்கள் நிர்வாகிகளுடன் பேசி கலந்து தங்கள் முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள். இந்நிலையில், நாளை காலை 10 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் விசிக இடம் பெறுமா என்பது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை என சிபிஐ, சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!.. விரைவில் விடுதலை?!.. தமிழக அரசு அதிரடி!..