1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TASMAC Contract Employees Receive 50 Lakh Insurance and SBI Salary Package as Diwali Gift

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

vijay tasmac
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாநில அரசு அவர்களுக்கு ஒரு சூப்பரான தீபாவளி பரிசை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து டாஸ்மாக் நிர்வாகம் ‘கார்ப்பரேட் சம்பள திட்டம்’ கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 22,877 ஒப்பந்த ஊழியர்கள் நேரடியாக பயனடைய உள்ளனர்.
 
இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக, எஸ்பிஐ-யில் சம்பளக்கணக்கு தொடங்கும் ஊழியர்களுக்கு பிரம்மாண்ட விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. கோல்டு பிரிவு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், சில்வர் பிரிவு ஊழியர்களுக்கு ரூ.30 லட்சமும் விபத்து மரண காப்பீடாக கிடைக்கும். மேலும், நிரந்தர ஊனம் மற்றும் டெபிட் கார்டுக்கான தனித்துவமான காப்பீடுகளும் இதில் அடங்கும்.
 
இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு, ஊழியர்களின் விபரங்களை சரிபார்த்து அக்டோபர் 15, 2026-க்குள் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு எடுத்திருக்கும் இந்த அதிரடி மற்றும் பாதுகாப்பான நடவடிக்கையால் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. 7 வீடுகளை காணவில்லை.. உயிரிழப்பு நடந்ததா?