1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk leader vijay will separate the votes

விஜய் வாக்குகளை பிரிப்பார்!.. ஜெயிக்க மாட்டார்!.. புள்ளிவிபரம் சொல்லு பிரபலம்...

vijay
தமிழக அரசியல் களம் இதுவரை அதிமுக, திமுக என இரண்டு களங்களில் பயணித்து வந்தது.. கடந்த 50 வருடங்களாக இந்த இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சி அமைத்து வருகிறது.. அதேநேரம் நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், விஜய் வாக்குகளை பெற்றாலும் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.

விஜய் அடிப்படையில் ஒரு திரைப்பட நடிகர் என்பதால் ரசிகர்கள் அவருக்கு வாக்களிப்பார்கள்.. நிறைய பெண்களிடம் அவருக்கு ஆதரவு இருக்கிறது.. அதேநேரம் சமீப காலமாக அவர் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.. அதற்கு முக்கிய காரணம் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்து விவாகரத்து வழக்கு, அதை தொடர்ந்து திரிஷாவைக் கூட்டிக்கொண்டு விஜய் ஒரு திருமணத்தை போனது எல்லாமே விஜயின் இமேஜை சரித்திருக்கிறது.

ஒருபக்கம் தேர்தலில் வெற்றிக்கு தேவையான கூட்டணியை விஜய் இதுவரை அமைக்கவில்லை. எனவே தவெக தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகியிருக்கிறது.. இந்நிலையில், தனியாக போட்டியிடுவது என்கிற முடிவை விஜய் எடுத்தால் என்னவாகும்  என்கிற கேள்விக்கு C Voter நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் தெரிவித்துள்ள கருத்தில் ‘விஜய் தனித்து போட்டியிட்டால் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை திமுகவிடமிருந்து பிரிப்பார்.. திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுகவிடமிருந்து பிரிப்பார் .. வாக்குகளை பிரிப்பதை தவற விஜயால் எந்த தொகுதியிலும் வெல்ல முடியாது’ என தெரிவித்திருக்கிறார்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
இன்னும் கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.. கடைசி தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரி..