ஜீரோ ஊழல்!.. ஜீரோ கமிஷன்!.. தலைவர் சொல்லிட்டாரு!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி!..
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாது:
டாஸ்மாக் வருவாய் இழைப்பைவிட முதல்வர் விஜய்க்கு மக்களின் உயிர்தான் முக்கியம். அரசு ஊழியர்களை முதல்வர் எப்போதும் கைவிடமாட்டார். மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுவேலையை அவர் உறுதி செய்வார். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளோம்.. பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம். முன்னாள் முதல்வர், அமைசர்களை பழிவாங்கும் எண்ணம் இல்லை. தோல்வி விரக்தியில் உதயநிதி பேசுகிறார்.
கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடது. மீறினால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தவெகவினர் டெண்டர் எடுக்கக்கூடாது. காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா இயங்க வலியுறுத்தியுள்ளோம். காவல் நிலையத்தில் யார் புகார் கொடுத்தாலும் வீடியோ பதிவு செய்யுமாறு கூறியிருக்கிறோம். வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மக்களுக்கு நன்றி சொல்ல செல்வார்கள். ஆனால், அதற்கு முன்பாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தலைவர் விஜய் கூறியிருக்கிறார். அதன்படி இன்று வில்லிவாக்கம் தொகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது என சொல்லியிருக்கிறார்.