தொடர்புடைய செய்திகள்
- இனிமே டெல்லிக்கு வரமாட்டேன்!.. சிபிஐக்கு கடிதம் எழுதிய விஜய்!..
- விஜயை பார்த்து 20 வருசம் ஆச்சி!.. ஏன் கிளப்பிவிடுறீங்க?!. பவன் கல்யாண் மறுப்பு..
- சிபிஐ அலுவலகத்திலிருந்து சிரித்துக்கொண்டே வெளியே வந்த விஜய்!.. வைரல் வீடியோ!...
- ஏப்ரல் 20ம் தேதி விவகாரத்து கேஸ்!.. 23ம் தேதி தேர்தல்!.. விஜய்க்கு பெரிய சவால்!..
- அந்த 2 பேர் சொல்வதை மட்டுமே கேட்கிறாரா விஜய்?.. தவெகவில் நடப்பது என்ன?..
அதிமுக ஆட்சியை பிடிக்கும்!.. விஜய் வாக்குகளை பிரிப்பார்!.. கருத்துக்கணிப்பில் தகவல்!..
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டாலே பல இயக்கங்களும், அமைப்புகளும் கருத்துக்கணிப்புகளை நடத்தும். இதற்கு முன்பும் சில கருத்துக்கணிப்புகள் வெளியானது.. அதில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் முதலமைச்சர் ஆவார். தவெக அதிக வாக்குகளை பெறும் என சொன்னார்கள்.. ஆனால் அது முழுக்க முழுக்க விஜய்க்கு ஆதரவான இயக்கம் என்பதால் அதை நம்ப தேவையில்லை என நெட்டிசன்களும், அரசியல் விமர்சகர்களும் சொன்னார்கள்..
சில கருத்துக்கணிப்புகள் திமுக முதலிடத்தையும், தவெக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடிக்கும் என சொன்னார்கள்.. இந்நிலையில்தான், Matriz என்கிற நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டிருக்கிறது.. அதன்படி திமுக கூட்டணி 104 முதல் 114 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், அதிமுக 114 முதல் 127 தொகுதிகளில் வெற்றி பெறும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்றவை 6 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்கப்பட்டிருக்கிறது.
மேலும், அதிமுக 39 முதல் 40 சதவீத வாக்குகளையும், திமுக 37 முதல் 38 சதவீத வாக்குகளையும், தவெக 14 முதல் 15 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 10 முதல் 12 சதவீத வாக்குகளையும் வாங்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைப்பார்க்கும் போது ஆட்சியை பிடிக்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி முந்தைய தேர்தல் வாங்கிய வாக்குவங்கியை தக்க வைத்தால் மட்டுமே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரையில்