1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk leader viay in five place same day

கரெக்ட் டைமுக்கு போவாரா விஜய்?.. ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரச்சாரம்!.

vijay
நடிகர் விஜய் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் முதல் சட்டமன்ற தேர்தலை விரைவில் சந்திக்கவிருக்கிறது. அநேகமாக நாளை 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தேர்தல் பணிக்காக பெரம்பூர் பகுதியில் விஜய் சொந்தமாக ஒரு ஆடம்பர பங்களாவையும் விலைக்கு வாங்கியிருக்கிறார். எனவே தேர்தல் தொடர்பான பணிகள் அங்கு நடக்கும் என தெரிகிறது..

இந்நிலையில்தான் வருகிற 28ம் தேதி விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார். முதல் நாளே 5 தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். காலை 10 மணிக்கு பெரம்பூர் எம்கேபி நகரிலும், மதியம் 1 மணிக்கு கொளத்தூரிலும், 2 மணிக்கு வில்லிவாக்கத்திலும், 3 மணிக்கு அண்ணா நகரிலும், 4 மணிக்கு விருகம்பாக்கத்திலும் அவர் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது..

ஆனால், விஜய்க்கு சரியான நேரத்திற்கு சென்று பழக்கமில்லை.. கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி காலை 8:30 மணிக்கு நாமக்கல் வருவதாக சொல்லிவிட்டு சென்னையிலிருந்து 8.30 மணிக்கு வீட்டிலிருந்தே கிளம்பினார் விஜய்.  மதியம் 12.30 மணிக்கு அங்கு சென்றார்.. மதியம் 12.30 மணிக்கு கரூர் வருவதாக சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு போனார். அதனால்தான் அங்கு சோக சம்பவம் நிகழ்ந்தது. இப்போது இத்தனை மணிக்கு இந்த இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்வார் என தவெக அறிவித்திருக்கிறது. ஆனால், விஜய் சரியான நேரத்திற்கு போவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
இனிமே வண்டி நிக்காது!.. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்?!..