1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. polytical reporters comment on perambur

விஜய் சட்டசபைக்கு வரணும்னு ஆசைப்படும் அதிமுக, பாஜக!.. பெரம்பூர் தொகுதியில் நடப்பது என்ன?..

vijay
நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. வருகிற 28ம் தேதி அந்த தொகுதியில் அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். விஜய் ஒரு நட்சத்திர போட்டியாளர் என்பதால் பெரம்பூர் தொகுதி கவனம் பெற்றிருக்கிறது.  
பெரம்பூர் தொகுதியை பொருத்தவரை 2016 மற்றும் 2021 இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றது

இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றதால் பெரம்பூர் தொகுதி திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் நிலையில்தான் விஜய் அந்த தொகுதியில் களமிறங்குகிறார். அதேநேரம் அந்த தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிடாமல் அந்த தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அரசியல் விமர்சகர்களும் பத்திரிக்கையாளர்களும் இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்..

பெரம்பூர் தொகுதியில் தவெகவுக்கு 40 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் விஜய் அங்கு போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் பாமகவிற்கு பெரிய கட்டமைப்புகளோ, கிளைகளோ இல்லை. ஆனாலும் அந்த தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியிருக்கிறது அதிமுக. பெரம்பூரில் ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.. அப்படி இருக்கும் போது அங்கு பாமக போட்டியிடுவதால் விஜயின் வெற்றி எளிதாக்கப்படும். விஜய் எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு வர வேண்டும் என அதிமுகவும், பாஜகவும் நினைக்கிறது.. எனவே இதை ஒரு பொலிட்டிக்கல் டாக்டிகல் அண்டர்ஸ்டாண்டிங் காகத்தான் பார்க்கிறோம் என்கிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுங்க!. பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த திமுக?!..