1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. congress general secretary is suspended

ஓவராக பேசிய ஆதவ் அர்ஜுனா!.. காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்!...

selva perunthagai
நேற்று தவெக விழாவில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி ஒரு பரபரப்பான கருத்தை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் தவெக அலுவலகத்தின் வாசலில் காத்துக் கிடப்பதாகவும் விரைவில் காங்கிரஸிலிருந்து பலரும் தவெகவில் இணைவார்கள் என்றும் பேசியிருந்தார்.

ஏற்கனவே ரஜினியை பற்றிய ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையான நிலையில் திமுக - காங்கிரஸ் பற்றி குறிப்பாக காங்கிரஸ் கட்சி பற்றி ஆதவ அர்ஜுனா பேசியது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது..

அதுவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு முக்கிய நிர்வாகிகள் இன்னும் இரண்டு நாட்களில் தவெகவில் இணையப் போகிறார்கள், கட்டாயக் கல்யாணம் செய்தது போல திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்திருக்கிறது. இது தொடர்ந்தால் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்ன பேசியிருந்தார் ஆதவ் அர்ஜுனா.

இதுபற்றி தெரிவித்த காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ‘நாங்க யாரும் அங்க போய் நிற்கவில்லை.. ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே ரஜினி பற்றி பேசினார். இப்போது காங்கிரஸ் பற்றி பேசியிருக்கிறார். அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் சிறப்புமிக்க பேரியக்கம். யாரிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமில்லை’ என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பதவியிலிருந்து டி.செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அநேகமாக இவர் ஆதாவ் அர்ஜுனாவோடு பேசி வந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அனேகமக செல்வம் விரைவில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
போர் பதட்டம் தணிந்ததால் துபாய் எடுத்த சில அதிரடி முடிவுகள்.. ஏப்ரல் 1 முதல் அமல்..!