1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Demand Cauvery water or dismiss Congress ministers, EPS challenges CM Vijay

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

eps vijay
தமிழகத்தின் சட்டபூர்வ உரிமையான காவிரி நீரை பெற தமிழக வெற்றி கழக அரசு தீவிரமாக போராட வேண்டும் என்றும், ஒருவேளை கர்நாடகா தண்ணீர் தர மறுத்தால் தவெக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்களை நீக்க முதலமைச்சர் விஜய் தயாரா என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அவர் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கர்நாடக ஆட்சியாளர்கள் திமிர்பிடித்தத்தனத்துடனும், சர்வாதிகார மனப்பான்மையுடனும் செயல்படுவதாக அவர் சாடினார். 
 
தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமும், இருபதுக்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் காவிரியையே நம்பியுள்ள நிலையில், ஆண்டுதோறும் தண்ணீருக்காக தமிழகத்தை கையேந்த வைப்பதே கர்நாடகாவின் வாடிக்கையாக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
காவிரியில் தமிழகத்திற்கான பங்கு நீரை உடனடியாக பெற முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, தமிழக உரிமைகளை மதிக்காமல் கர்நாடகா தொடர்ந்து அடம் பிடித்தால், தவெக அரசு தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்களை பதவியில் இருந்து அதிரடியாக நீக்க வேண்டும் எனச் சவால் விடுத்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு