1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin is upset because dmk persons moving to tvk

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

stalin vijay
ஒரு அரசியல் கட்சியில் தலைவருக்கு கீழே இருக்கும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களை தவிர மற்ற நிர்வாகிகள் பதவிக்காக மட்டுமே அந்த கட்சியில் இருப்பார்கள். குறிப்பாக தான் இருக்கும் கட்சி ஆளும் கட்சியாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஒருவேளை தேர்தலில் அக்கட்சி தோல்வி பெற்றால் அதில் சிலர் வெற்றி பெற்ற கட்சியில் போய் சேர்ந்து விடுவார்கள். அரசியலில் இது எப்போதும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.

ஆனால், திமுகவினர் இதற்கு விதிவிலக்காக இருந்தனர். அதுதான் அந்த திமுகவின் பலமாக இருந்தது.  கலைஞர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது பற்றோடு இருப்பார்கள். தேர்தலில் திமுக தோல்வியடைந்தார்லும் கட்சியை விட்டு பலரும் செல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது அது மாறியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடித்துவிட்டது. அதோடு திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்றுப் போனார். இது கட்சியை ஆட்டம் காண செய்திருக்கிறது..

ஏற்கனவே அதிமுகவிலிருந்து பலரும் தவெகவுகு தாவிவிட்ட நிலையில் தற்போது திமுகவிலிருந்தும் ஒரு கூட்டம் தவெக பக்கம் செல்ல துவங்கியிருக்கிறது.  ஏற்கனவே திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் குமரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப், இலக்கிய அணி செயலாளர் வி.பி கலைராஜன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் உதயந்தி ஆகியோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் திமுகவிலிருந்து தவெகவுக்கு செல்பவர்களுக்கு விரைவில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படவுள்ளதாக தவெக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
கரூர் சம்பவம்!. அரசு வேலை கொடுப்பதற்கு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!..