செவ்வாய், 14 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (11:56 IST)

இனிமே விஜய் இப்டிதான் பிரச்சாரம் பண்ணனும்!. என்ன இப்படியெல்லாம் இறங்கிட்டாங்க...

vijay5
நடிகர் விஜய் அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும் சரி.. பிரச்சாரத்திற்கு சென்றாலும் சரி.. அவரை பார்க்க அதிக கூட்டம் கூடுகிறது.. ஒருபக்கம் அவர் செல்லும் வழியெங்கும் அவரது வாகனத்தை சுற்றிலும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் இரு சக்கர வாகனங்களில் வலம் வருகிறார்கள்.. ஆர்வக்கோளாறில் சிலர் விஜயின் வாகனத்தின் மீது கூட ஏறிவிடுகிறார்கள்.

விஜயுடன் செல்பி எடுக்க முயற்சி செய்வது, அவரை தொட்டுப் பார்க்க ஆசைப்படுவது என பல வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.. விஜயாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.. இதனால் போலீசார் விதிக்கும் கட்டுப்பாடுகளையும் தவெக பின்பற்ற முடியவில்லை..

அதுவும் கரூரில் 41 பேர் உயிரிழந்த பின் விஜய் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் போலீசார் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.. இது ஜனநாயக விரோதம் என தவெக சொன்னாலும் முந்தையை அனுபவங்களின் அடிப்படைகளை வைத்தே போலீசார் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.. ஏனெனில் எந்த அரசியல் தலைவருக்கும் கூடாத கூட்டம் விஜய்க்கு கூடுகிறது.. அசம்பாவிதம் ஏற்பட்டால் காவல்துறை பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால்தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது..

இதன் காரணமாக ஏற்கனவே கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் செய்யவிருந்த பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்தார். அதேபோல் நேற்று வில்லிவாக்கம், தி.நகர் போன்ற பகுதிகளில் விஜயின் பிரச்சாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்ததால் அந்த பிரச்சாரத்தையும் விஜய் ரத்து செய்தார். மேலும், இன்று சைதாப்பேட்டையிலும் ஒரு மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்தால் அதையும் ரத்து செய்து விட்டார்.. நாளை நெல்லையில் விஜய் பிரச்சாரம் செய்கிறார். அதேநேரம் 19 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்..

vijay5
இப்படியே போனால் விஜய் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைவர் மக்களிடம் அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் விஜய் அப்படி செய்ய முடியுமா என தெரியவில்லை. இதை புரிந்துகொண்ட தவெக வேட்பாளர்கள் சிலர் விஜயை போலவே ஒரு சிலையை உருவாக்கி அதை பிரச்சார வாகனத்தில் நிற்கவைத்து அந்த சிலைக்கு அருகே அவர்கள் நின்று கும்பிட்டபடி  வாக்கு சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.