கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜய் முதல்வரானவுடனேயே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றுதான் டாஸ்மாக் கடை தொடர்பான அறிவிப்புகள். இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைக்க கூடாது, கள்ள சந்தைகள்யில் மது விற்பனை செய்யக்கூடாது, பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்க கூடாது என்றெல்லாம் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, பாட்டிலுக்கு பத்து ரூபாய் சேர்த்துக் கேட்டால் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பல இடங்களில் அது சண்டையாகவும் மாறியது., இதன் காரணமாக பல இடங்களில் கடைகள் மூடப்பட்டது..
ஒருபக்கம் காலி பாட்டில்களை திரும்பப்பெறுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாகவே சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அரசுக்கும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
ஒருபக்கம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் தனியார் பார்கள் மற்றும் எலைட் ஷாப் கடைகளுக்கு சென்று மது வாங்க துவங்கினர். இதனால் தனியார் பார்களில் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
இதை பயன்படுத்தி தனியார் பார்களில் ஒரு குவார்ட்டருக்கு 100 முதல் 200 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டினர்.