1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. two tvk candidates not filled the nomination

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

vijay
விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் ஒரு கவனம் பெற்ற அரசியல் தலைவராக பார்க்கப்படுகிறார். அவர் எங்கு சென்றாலும் அவரை பார்க்க ரசிகர்களும் பொதுமக்களும் கூடுகிறார்கள்..

அதுவும் மற்ற தலைவர்களுக்கெல்லாம் கூடாத கூட்டம் அவருக்கு கூடுகிறது. இதனால் அவரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு போலீசார் பல கெடுபிடிகளை விதிக்கிறார்கள்.. இதன் காரணமாக தனது பிரச்சார கூட்டங்களை விஜய் தொடர்ந்து ரத்து செய்து வருகிறார். ஒரு பக்கம் விஜய் அறிவித்த இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தக்கல் செய்யாதது தெரியவந்திருக்கிறது. ஏப்ரல் 6ஆம் தேதியான இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊத்தங்கரை, ஓசூர் தொகுதிகலில் விஜய் அறிவித்த வேட்பாளர்கள் குமரவேல், அம்ரிஷ் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.. இவர்களுக்கு மாற்றாக ஊத்தங்கரையில் இளையராஜாவும் ஓசூரில் வேந்தர்கரசனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் இளையராஜா ஒரு வாரத்திற்கு முன்புதான் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..