திங்கள், 6 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2026 (21:51 IST)

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

vijay
தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில், தவெக தலைவர் விஜய் நட்சத்திர வேட்பாளராக இருப்பதால் அவர் எங்கு போனாலும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. இதனால், விஜய்க்கு பல கட்டுப்பாடுகளை போலீசார் விதிக்கிறார்கள்.

திருச்சியில் மட்டுமே விஜய் திட்டமிட்டபடி பிரச்சாரம் செய்தார். அதன்பின் சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூரில் பிரச்சாரம் செய்தார். அதன்பின் கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர்  போன்ற தொகுதிகளில் பிரச்சார செய்ய திட்டமிடிருந்தார். ஆனால், போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக்கூறி பிரச்சாரத்தை ரத்து செய்தார்.

அதன்பின் இன்று தி.நகர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்ததால் இந்த பிரசாரத்தை விஜய் ரத்து செய்தார். அதேபோல், நாளை சைதாப்பேட்டையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் போலீசார் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்க அதையும் விஜய் ரத்து செய்தார்.

இந்நிலையில், நாளை மறுநாள் அதாவது 8ம் தேதி நெல்லையில் விஜய் பிரச்சாரம் செய்ய 19 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள்., விஜய் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.