தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..
சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க மேலும் 10 எம்.ஏல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. அவர்கள் ஆதரவு கொடுக்கவே தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியமைந்திருக்கிறது. ஒருபக்கம் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
மேலும் தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது அதை ஆதரித்தும் அவர்கள் வாக்களித்தனர். ஆனால் அதில் 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே சென்று விட்டனர். சிவி சண்முகம் மட்டும் இதுவரை எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க மறுத்து வருகிறார். எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சி.வி சண்முகத்துடன் பேச்சு வார்த்தை நடந்தும் அவர் மனம் மாறவில்லை.
இந்நிலையில்தான்,ம் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த வெள்ளமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருகிறார்கள். ஒருவர் சிவி சண்முகம், மற்றொருவர் அது குறித்து பேசி வருகிறார். அவர் யார் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் என கூறி விட்டு சென்றார். சிவி சண்முகம் தவெகவில் இணைகிறார் என்கிற செய்தி எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்குகு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.