1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tv serial actor support tvk leader vijay

இனிமே அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன்.. சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ...

eps vijay
விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 108 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததால் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஏனெனில், ஆட்சியமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறார்கள். அதேநேரம், சில கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, தவெகவின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம், பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றதாலும் அதிக சதவீத வாக்குகளை பெற்றதாலும் விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்.. விஜய் தனது ஜெஜாரிட்டையை சட்டசபையில் நிரூபிப்பார் என பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால் மூன்று முறை விஜய் ஆளுநரை சந்தித்து இது பற்றி கோரிக்கை வைத்தும் ஆளுநர் இதுவரை தவெகவ்வை ஆட்சியமைக்க  அழைக்கவில்லை..

இது விஜயின் ரசிகர்களையும், பொதுமக்களையும், திரையுலகிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘கடந்த பல வருடங்களாகவே நான் இரட்டை இலைக்குதான்  வாக்களித்து வந்தேன்.. ஏனெனில் நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன். ஆனால் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது இனிமேல் நான் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்..

ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்கிற நல்ல மனம் இருந்தால் போதும்.. ஒருவர் எந்தவித பின்னணியும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்திருக்கிறார்.. அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இந்த அரசியல்வாதிகள் என்னென்ன செய்கிறார்கள்.. இதையெல்லாம் பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது’ என அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.


அடுத்த கட்டுரையில்
அதிமுகவில் அதிரடி திருப்பம்: எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆப்சென்ட்!