அதிமுக ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்டோம்!. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!..
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே நேரம் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் ஆதரவை பெற்று தவெக ஆட்சி அமைத்தது.
அந்த கட்சியின் தலைவர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். ஒருபக்கம் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினோம்.. ஆனால் அவரோ தேவையில்லை.. நாம் வெற்றி பெறுவோம் என சொன்னார். ஆனால் தேர்தலுக்குப் பின் திமுக ஆதரவில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்.. அது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலைஇல், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த டிடிவி தினகரன் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். நாங்கள் திமுகவுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.. பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க விஜயிடம் ஆதரவு கேட்டோம். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதேபோல் திருமாவளவனை முதல்வராக்கும் ஆலோசனையும் நடத்தப்பட்டது.
திமுக தீய சக்தி என சொல்லிவிட்டு அதன் மூலம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், பாஜக உள்ளே வந்துவிடும் என சொல்லி அதிமுக ஆட்சி அமைவதை கம்யூனிஸ்டு விரும்பவில்லை என அவர் கூறியிருக்கிறார்.