1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. gen z youngster becoming irresponsible

25 வயதுக்குள் கடன்!.. சம்பளம் எல்லாம் காலி!.. தடம் மாறும் Gen Z இளைஞர்கள்!..

gen z
சமீப காலமாகவே ஜென்சி (Gen Z) என்கிற பெயர்தான் அதிகமாக அடிபடுகிறது. 20 இலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இப்படி அழைக்கிறார்கள். ஒருபக்கம் டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக Gen Z இளைஞர்கள் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார்கள்.

ஆனால் ஒருபக்கம் அதே Gen Z இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். சிறு வயதிலேயே நிறைய கெட்ட பழக்கங்களை பழகிக் கொள்கிறார்கள். வாலிப வயதிலேயே சிகரெட், மது, கஞ்சா, போதை மருந்து ஊசி என ஒரு பக்கம் Gen Z கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கூட கர்நாடகாவில் 7 ஆயிரம் கல்லூரி, மாணவ மாணவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில்தான்,  இந்தியாவில் உள்ள Gen Z இளைஞர்கள் தங்கள் வருமானத்திற்கு பெரும் பகுதியை மின்சாரம், ஓடிடி, வாடகை போன்ற கட்டணங்களுக்கு செலுத்துவதாகவும், மளிகை பொருட்கள் ஷாப்பிங் மற்றும் உணவுக்காக அதிகமாக செலவிடுவதாகவும் SalarySe ஆய்வில் தெரிய வந்திருக்கிறது..

மேலும் 5 சதவீத பணத்தை மட்டுமே அவர்கள் சுற்றுலாவுக்கு செலவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு 25 வயதுக்குள்ளாகவே Gen Z இளைஞர்கள் பர்சனல் லோன், கிரெடிட் கடன் ஆகியவற்றின் மூலம் கடனாளியாக மாறி விடுகிறார்கள் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தவெக அரசுக்கு மத சாயம் பூச பாஜக முயற்சியா? முதல்வர் விஜய் முன் நிற்கும் பெரும் சவால்...