1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. attack on indians have increased in foreign countries

வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்!.. 5 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரிப்பு!...

racisim
இந்தியர்கள் பல வெளிநாடுகளிலும் வசிக்கிறார்கள், குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, நார்வே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.

அதில் பலரும் அந்த நாடுகளிலேயே வேலை செய்தோ அல்லது அங்கேயே தொழில் நடத்தியோ அந்த நாட்டின் குடியுரிமையை வாங்கி அங்கேயே குடும்பத்துடன் செட்டிலாகி விடுகிறார்கள். இது அந்த நாடுகளில் வசிக்கும் மக்களில் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. ‘எதற்காக எங்கள் நாட்டில் வந்து எங்கள் வேலைவாய்ப்பை பறிக்கிறீர்கள்?’ என அவர்கள் இந்தியர்கள் மீது தொடர்ந்து கோபம் காட்டி வருகிறார்கள்.

இது தொடர்பான பல வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த ஐந்தாண்டுகளில் ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

2021ம் வருடம் 15 ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள் 2025-ல் 104ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 33 சம்பவங்களும், UAE நாட்டில் 32  சம்பவங்களும், இங்கிலாந்தில் 31, கனடாவில் 30 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியிருக்கிறது. இதில் பதிவாகாத சம்பவங்கள் நிறைய என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
25 வயதுக்குள் கடன்!.. சம்பளம் எல்லாம் காலி!.. தடம் மாறும் Gen Z இளைஞர்கள்!..