1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk mla markendeyan says he is happy

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

markendeyan
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சமீபத்தில் கோவில்பட்டி திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது முதலமைச்சர் விஜய் பற்றி மிகவும் அவதூறாகவும், மரியாதை குறைவாகவும் பேசினார். முதல்வர் விஜயை ஒருமையில் விமர்சித்த அவர் ‘நீ சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகளை உடைத்து விடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து இவர் மீது புகாரளிக்கப்பட்டு அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலயில், மார்க்கண்டேயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டனர்.

அதன்பின் மீண்டும் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்களுக்கு அவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் சிறையில் அடைப்பதற்காக அவரை போலீசார் கூட்டி சென்ற போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன் ‘சிறை சவுகரியமாக இருக்கிறது.. நீங்கள் நினைக்கும் அளவிற்கு இல்லை.. மீண்டும் ஜாமீன் மனு போட வேண்டிய அவசியம் இல்லை.. எவ்வளவு துன்பப்படுகிறோமோ அவ்வளவு விரைவாக ஆட்சிக்கு வருவோம்’ என அவர் கூறினார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..