அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கெடு!.. தமிழக அரசு அதிரடி...
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும் ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே 707 டாஸ்மார்க் மூடப்பட்டது. சமீபத்தில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் மற்றும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயண திட்டமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மேலும், அரசுத் துறைகளில் லஞ்சத்தை ஒழிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் வந்தால் அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு துறைகளில் பரவலாக லஞ்சம் குறைந்துள்ளதாக பொதுமக்களே கூறுகிறார்கள்.
இந்நிலையில்தான், தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை அக்டோபர் 31க்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் சொத்துக்கு விபரத்தை தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் பெயர் இடம் பெறும் எனவும், தவறினால் நன்னடத்தை விதியை மிறியதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதனால், அதிக சொத்துக்களை வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.