1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn tranpsort reduced ticket price for male

வெற்றிப் பயண திட்டம் எதிரொலி!.. அரசு பேருந்தில் ஆண்களுக்கு கட்டணம் குறைப்பு...

free bus
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வெற்றிப் பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 2ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதன் காரணமாக தனியார் பேருந்துகளை தவிர்த்து விட்டு பெண்கள் அரசு பேருந்துகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் தனியார் பேருந்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது..

ஒருபக்கம் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளில் ஆண்களுக்கு டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது., இந்நிலையில், இதை ஏற்று குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை, மார்த்தாண்டம், குமரி போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் ஆண்களுக்கான கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
1000 பேரை பணியில் இருந்து நீக்குகிறது அமேசான்.. இந்தியர்கள் எத்தனை பேர்?