1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. communist parties will come out alliance

கூட்டணியிலிருந்து வெளியேறும் கம்யூனிஸ்ட்டுகள்?!.. தவெக அடுத்த மூவ் என்ன?...

vijay communist
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தன.

இதில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நாங்கள் வெளியே இருந்து ஆதரவு கொடுக்கிறோம் என சொல்லிவிட்டது. தற்போது தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில் தவெக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கு தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார் ஆகியோர் பதிலடிம் கொடுத்து வருகிறார்கள்..

குறிப்பாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு, இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக போட்டியிட்டது, இடைத்தேர்தலில் தவெக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கம்யூனிஸ்ட் சொன்னது போன்ற பல காரணங்களால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அனேகமாக, இடைத்தேர்தலுக்கு பின் தவெகவுக்கு கொடுத்த ஆதரவை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திரும்பப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தவெக ஆலோசனை செய்து வருகிறது.

அதாவது, பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என தவெக முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாமக இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இருக்காது என திருமாவளவன் ஏற்கனவே கூறியிருக்கிறார். வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதால் திருமா என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பஸ்ல போகும் ஆண்களின் நிலைமை கொடுமை!.. தாய்மாமன் புகழ் ஓங்குக!.. புளூசட்ட மாறன் நக்கல்...