1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police arrested tvk mla arul vingesh

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது..

arul vignesh
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்கிற புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை மாதமே பெண் கலெக்டர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தார் எனவும், மூன்று மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.

ஒருபக்கம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. மேலும் திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து நேரில் ஆஜராகி அளிக்கும்படி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விக்னேஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அருள் விக்னேஷை போலீசாரல் கைது செய்தனர்.
அடுத்து மேஜிஸ்ட்ரேட்டிடம் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...