1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn government increased the dearness allowance

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

vijay
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றவுடன் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். போதைப் பொருட்கள் தடுப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, டாஸ்மாக் கடைகளில் மூடுவது என தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இது எல்லாமே மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இன்று காலை முதலே பல அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதலில் கலைஞர் மகளிர் இலவச பேருந்து சேவை தொடரும்.. அது நிறுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்தது.. அதேபோல், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் விரைவில் வரவழைக்கப்படும்’ எனவும் தமிழக அரசு அறிவித்தது..

தற்போது அடுத்த அறிவிப்பாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதாக முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். நட்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 60 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு வருடத்திற்கு ரூ.1230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவது குறிப்பிடத்தக்கது.