1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin asking dmk to be active in social networks

விஜய்க்கு ஓட்டு போட்டதுக்காக மக்கள் ஃபீல் பண்றாங்க!.. முக ஸ்டாலின் தாக்கு!...

vijay stalin
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆட்சியில் வெற்றி பெற்ற திமுக தற்போது எதிர்கட்சியாக மாறியிருக்கிறது. இந்நிலையில், திமுக தோல்வி அடைந்தது தொடர்பாக ஆலோசிக்க இன்று அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:

திமுகவின் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.. இப்ப நம்மளை பார்க்கிற எல்லாருமே ஏன் சோசியல் மீடியாவில் எப்ம் ‘எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம்.. என்னோட ஒரு ஓட்டுல என்னாகிட போதுன்னு தெரியாம அந்த கட்சிக்கு போட்டுட்டேன்னு பொழம்புறாங்க.. அது மட்டுமல்ல இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வச்சிட்டோமோன்னு பலரும் சமூகவலைத்தலங்கலில் பலரும் பதிவு போடுவதையும் பார்க்கிறேன்.. இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்..

இப்போது திமுகவோட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் ஆட்சி நடைபெற்று வருகிறது.. சூரியன் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு எதுவும் நடக்காது.. எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைக்க வேண்டிய பயம் திமுகவுக்கு இல்லை.. கட்சியின் எதிர்காலம் கருதி நான் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன்.. டீக்கடையில் பேசும் அரசியலை திமுகவின் இனிமேல் வலைதளங்களிலும் பேசுங்க.. திமுகவின் தோல்விக்கு சமூக வலைதளத்தின் தாக்கமும் ஒரு காரணம்.. எனவே அதிலும் திமுகவினர் சிறப்பாக செயலாற்ற வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்டுரையில்
பாட்டிலுக்கு 10 ரூபா வாங்கினா நடவடிக்கை!.. விஜய் போட்ட உத்தரவு!. மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!..