1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rangaraj raj pandey support tvk vijay

ரீல் அரசியலா?.. விஜய் ரியல் அரசியலை காட்டிட்டாரே!.. ரங்கராஜ் பாண்டே ராக்ஸ்..

rangaraj pandey
தமிழக சட்டசபையில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகவும், உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்திருக்கிறார்கள். எனவே இது பொது மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. விஜய் அரசியலில் புதியவர்.. முதல் முறையாக சட்டமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார்
. ஆறு மாதத்திற்கு தவெகவை நாங்கள் எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதேநேரம் நேற்று சட்டசபை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தவெகவை நக்கலடிப்பது போல பல கருத்துக்களை கூறினார். அதில் ஒன்றுதான் ‘நீங்கள் ரீல்ஸ் அரசியலை செய்யாமல் ரியல் அரசியலை செய்யுங்கள்’ என விஜயை பார்த்து சொன்னார். அதோடு நீங்கள் 35 சதவீத வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள்.  மீதி 65 சதவீதம் பேர் உங்களை நிராகரித்துவிட்டனர்’ என அவர் கூறியிருந்தார். இதற்கு சட்டசபையில் விஜய் பதிலளிக்கவில்லை என்றாலும் தனது twitter பக்கத்தில் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார்..

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே ‘ரியல் அரசியலைத்தான் விஜய் காட்டிட்டாரே. 10 சீட்டு வராதுன்னு சொன்னோம்.. ஜெயிச்சுட்டார்.. ஆட்சிக்கு வர முடியாதுன்னு சொன்னோம்.. ஆட்சி அமைத்துவிட்டார் பெரும்பான்மை இல்லைன்னு சொன்னாங்க.. இப்ப 144 எம்எல்ஏ அவர் கூட.. அப்போ ரியல் அரசியல் நிரூபிச்சிட்டாருன்னுதான அர்த்தம்’ என கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
நிதிநிலை குறித்து அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை!.. வெள்ளை அறிக்கை வெளியாகுமா?..