1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavans demand for giving support to tvik

விசிக வைக்கும் 4 நிபந்தனைகள்!.. அதிர்ச்சியில் தவெக!. விஜய் சம்மதிப்பாரா?...

vijay thiruma
சட்டமன்ற தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்றாலும் 108 தொகுதிகளில் மட்டுமே தவெக வெற்றிபெற்றதால் தவெகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதுவரை 3 முறை தவெக தலைவர் விஜய் 3 முறை ஆளுநரை நேரில் சந்தித்து தவெகவை ஆட்சி அமைக்குமாறு கோரிக்கை வைத்தும் இப்போதுவரை ஆளுநர் அழைக்கவில்லை. காங்கிரஸ் 5, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்து 4 என ஆதரவு கொடுத்த்தாலும் தவெகவின் பலம் 116ஆக மட்டுமே இருக்கிறது.

ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலைய்ல் ஏற்கனவே தவெக தரப்பு விடுதலை சிறுத்தை கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளது. ஆனால், திருமாவளவன் இப்போதுவரை தனது முடிவை கூறாமல் இருக்கிறார். திருமா நேற்று தனது விசிக முக்கிய நிர்வாகிகளிடம் காணொளி மூலம் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி ஆலோசனை செய்தார்.. அநேகமாக இன்று காலை திருமா தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்நிலையில், விசிக தரப்பிலிருந்து வைக்கப்படும் நிபந்தனைகள் தவெக தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. துணை முதல்வர் மற்றும் ஒரு அமைச்சர் என இரண்டு பதவிகளை விசிக கேட்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு விசிக வேட்பாளரை நிறுத்தவேண்டும் எனவும் கேட்கப்பட்டிருக்கிறதாம்.

அதேபோல், திருமாளவன் ராஜினாமா செய்யும் எம்.பி. பதவி மிண்டும் விடுதலை சிறுத்தைக்கே கொடுக்கப்பட வேண்டும் எனவும் சொல்வதாக தெரிகிறது. அதோடு, தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக சட்டசபையில் சட்டம் இயற்றவேண்டும் எனவும் கேட்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. எனவே, இது தொடர்பாக விஜய் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

About Writer
பாலகிருஷ்ணன்