தொடர்புடைய செய்திகள்
- விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு.. தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு.. என்ன தண்டனை?
- 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை.. நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
- முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை
- ஷேக் ஹசீனா அறிக்கைகளை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை..!
- ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா
தூத்துக்குடி மாணவி கொலை!.. குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை!...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பளித்திருக்கிறது.
கடந்த மார்ச் 10ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த சிறுமி காட்டுப்பகுதிக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்து சென்ற தர்ம முனிஸ்வரன் அவரை தலையில் பலமாக அடித்தார். அதில் சிறுமி மயக்கமடைந்தார். அதன்பின் கஞ்சா போதை அருந்திவிட்டு சிறுமியை தர்ம முனிஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் போலீசார் தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தததை தர்ம முனீஸ்வரன் ஒப்புக்கொண்டார்..
கடந்த 75 நாட்களாகவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பலரும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் தர்ம முனீஸ்வரனுக்கு நீதிபதி இரட்டை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். பாலியல்பலாத்காரம் செய்ததற்கு ஒரு தூக்கு தண்டனை, கொலை செய்ததற்கு ஒரு தூக்கு தண்டனை என இரண்டு தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.. சம்பவம் நடந்து 76 வது நாளில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.