1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk vijay gone to meet governor again

118 வந்தாச்சி!. தமிழக முதல்வராகிறா விஜய்!... ஆளுநருடன் சந்திப்பு..

vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க  தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. தவெக ஆட்சி அமைக்க 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க தேவையான 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் வந்தால் மட்டுமே தவெகவை ஆட்சியமைக்க அழைப்பேன் என ஆளுநர் கூறிவிட்டார்.

எனவே, தேவையான ஆதரவை பெறும் முயற்சியில் தவெக இறங்கியது. அதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது.  எனவே தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்திருக்கிறது. ஆட்சியமைக்க  இன்னும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவை. எப்படியும் விசிகட் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு கொடுத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தவெக ஆட்சி அமைவதும், விஜய் முதல்வராவதும் உறுதியாக இருக்கிறது..

இதைத்தொடர்ந்து 3வது முறையாக ஆளுநரை சந்திப்பதற்காக விஜய் சென்றுள்ளார். இந்நிலையில்தான், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் ஆதரவும் விஜய்க்கு கிடைத்திருக்கிறது. எனவே, விஜய்க்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது உறுதியாகியிருக்கிறது. தவெக 107, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. அதாவது, விசிக ஆதரவு இல்லாமலேயே தவெகவுக்கு தேவையான ஆதரவு கிடைத்துவிட்டது.
அடுத்த கட்டுரையில்
நாளை முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்!...