அமமுக எம்.எல்.ஏவிடம் பேரமா?.. கோபத்தில் பாஜக!.. இப்படி மாட்டிக்கிட்டாரே விஜய்?..
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் இதுவரை கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் தவெகவிடம் தற்போது 116 எம்.ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தை கட்சி இதுவரை தங்களின் நிலைப்பாட்டை சொல்லவில்லை.
இதற்கிடையில் நேற்று இரவு அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் எங்கள் எம்எல்ஏ காமராஜை காணவில்லை.. அவரை தொடர்பு கொள்ள முடியவிலை. தவெகவினர் அவரை கடத்திக் கொண்டு போய் விட்டனர் என காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் காமராஜ் தவெகவை ஆதரித்து கடிதம் கொடுத்திருப்பதாக சொல்லி அந்த கடிதத்தின் நகலை நேற்று மாலை விஜய் உள்ளிட்ட தவெகவினர் ஆளுநரை சந்தித்தபோது அவரிடம் காட்டியிருக்கிறார்கள்.
இதனால் கோபப்பட்ட டிடிவி தினகரன் தவெகவை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.. தூய சக்தி என சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஏன் இப்படி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறீர்கள். இன்னும் ஆட்சிக்கே வரவில்லை.. அதற்குள் இப்படியெல்லாம் செய்வீர்களா?.. என்று ஆவேசமாக பேசினார். அதன்பின் திடீர் டிவிஸ்ட்டாக அமமுக எம்எல்ஏ காமராஜ் நான் தவெகவ்வை ஆதரிக்கவில்லை.. தவெகவை ஆதரித்து எந்த கடிதமும் கொடுக்கவில்லை என செய்தியாளர்களிடம் கூறியதோடு டிடிவி தினகரனையும் சந்தித்தார். ஆனால் காமராஜ் முழு மனதுடன் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார் என சொல்லி காமராஜர் ஆதரவு கடிதத்தை எழுதிய வீடியோவை தவெக வெளியிட்டது.. மேலும், நாங்கள் யாருடனும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறியது.. ஆனால், ஆளுநரிடம் காட்டியது போலி கடிதம் என டிடிவி தினகரன் தொடர்ந்து பேசி வருகிறார்
அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில். டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருப்பவர். அவரிடமிருந்து எம்.எல்.ஏ-வை பாதுகாக்க முயற்சித்தால் கண்டிப்பாக இது பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஆளுநர் மூலமாக பாஜக ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பதாக பலரும் சொல்லும் நிலையில் தற்போது இந்த விவகாரம் தவெகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரையில்