விஜய்க்கு கை கொடுப்பாரா திருமா?.. தவெக ஆட்சி அமைக்குமா?.. இன்று முடிவு!..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஏனெனில் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதில் காங்கிரஸ் 5, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்து 4 என ஆதரவு கொடுத்துள்ளதால் தவெகவின் பலம் 116ஆக உயர்ந்திருக்கிறது.
ஆனாலும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதில், விடுதலை சிறுத்தை கட்சி மட்டும் இப்போது வரை தங்கள் முடிவை சொல்லாமல் இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று தனது கட்சி நிர்வாகிகளிடம் காணொளி மூலம் ஆலோசனை செய்தார்.. ஆனால் நேற்று இரவு அவர் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எதுவும் கூறவில்லை. இதனாலேயே தவெகவை ஆட்சியமைக்க இதுவரை ஆளுநர் அழைக்காமல் இருக்கிறார்..
அநேகமாக திருமாவளவன் இன்று தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திருமாவளவன் என்ன முடிவு எடுப்பார் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்..