விஜயை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது!.. திருமாவளவன் ஓப்பன்...
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் விஜயும், எடப்பாடி பழனிச்சாமியும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் எனக் கூறியிருந்தார்.
தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைக் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன.
இதையடுத்து, அந்த கட்சிகளுக்கு அமைச்சர் பதவியும் விஜய் கொடுத்திருக்கிறார். விசிக எம்.எல்.ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது தவெக கூட்டணியில் விசிக இருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது திமுகவுக்கு ஆதரவாகவும் திருமா பேசிவருகிறார்..
இந்நிலையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் விஜயை இணைத்து நான் பேசியது தவறு என உணர்ந்திருக்கிறேன்.. பாஜகவின் அச்சுறுத்தலையும் மீறி காங்கிரஸுடன் கூட்டணி என்று முதல்வர் விஜய் நடித்த முடிவால் அவரின் கூட்டணியில் இணைந்தோம் எனவும் கூறியிருக்கிறார்.