நாளை மதுராந்தகத்தில் 45 கி.மீட்டருக்கு ரோட் ஷோ!.. 10 பொறுப்பு அமைச்சர்கள் களத்தில்...
தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இரண்டு தொகுதிகளையும் எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என தவெக கருதுகிறது.
அதேபோல் இந்த இடைத்தேர்தலில் தவெகவை தோற்கடித்து மக்களின் நம்பிக்கையே தவெக இழந்துவிட்டது என காட்ட வேண்டும் என திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது..
தவெகவை பொறுத்தவரை சில நாட்களுக்கு முன்பு மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்தார். அதேபோல் நேற்று தாராபுரத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இரண்டு கூட்டங்களிலும் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில்தான், நாளை மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சுமார் 45 கிலோமீட்டர் தூரம் ரோட் ஷோ மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் வழிபாடு செய்து விட்டு அச்சரப்பாக்கம் வழியாக ஒரத்தி வரை அவர் ரோட் ஷோ மேற்கொள்கிறார். 5 கிலோ மீட்டருக்கு ஒரு எம்.எல்.ஏ ஏற்பாட்டு பணிகளை மேற்கொள்ள தவெக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது..
மாமண்டூர் முதல் மாம்பாக்கம் வரை 39 முக்கிய இடங்களில் வாகனத்தை நிறுத்தி விஜய் மக்களை சந்திக்கிறார். விஜயின் ரோட் ஷோவுக்கு 10 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.