1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan confirm we wont be in the alliance

பாமக வந்தா நாங்க போயிடுவோம்!.. தவெகவுக்கு செக் வைத்த திருமாவளவன்...

thiruma vijay
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவன் இரண்டு நாட்கள் யோசித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து கடைசி நேரத்தில்தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தார்..

அதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ வன்னியரசுக்கு முதலமைச்சர் விஜய் அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார். அதேநேரம் மேடைகளில் பேசும் திருமாவளவன் தவெகவை விமர்சித்தும் வருகிறார். திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை.. கரூர் சம்பவத்தில் விஜயின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நான் அப்போதே முக ஸ்டாலினிடம் கூறினேன்.. அவர்கள் அதை செய்யவில்லை.. அதனால்தான் அவர்கள் தோற்றுப் போனார்கள்’ என்றெல்லாம் பேசி குழப்பி வருகிறார்..

ஒருபக்கம் தவெக அரசை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருவதால் அக்கட்சியை கழட்டி விட்டுவிட்டு பாமகவை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் தவெக இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸிடம் பேசி வரும் தவெக தரப்பு சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்க தயாராக இருப்பதாக சொல்லப்பட்டதாக செய்திகள் கசிந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ‘பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தை கட்சி ஒருபோதும் இருக்காது என்பதை 15 வருடங்களாக சொல்லி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
174 பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி!.. யார் இந்த ரியல் ஹீரோ ஸ்மித் மச்சார்?!....