1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump warning iran related to fly dubai issue

ஃபிளை துபாய் விமான விவகாரம்!. ஈரானுக்கு மட்டும் தொடர்பு இருந்தா!.. டிரம்ப் வார்னிங்!.

fly dubai
சமீபத்தில் துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த ஃபிளை துபாய் விமானத்தில் இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் குத்தி விமான விபத்தை ஏற்படுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளின் உதவியோடு அந்த விமானம் துபாயில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதனால் 174 பயணிகளின் உயிர் தப்பியது. தற்போது விமானி ஸ்மித் மச்சார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விமானத்தில் தாக்குதல் நடத்திய துணை விமானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் ஏதேனும் தீவிரவாத குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாரா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

விசாரணையில் அவர் மத கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றக்கூடிய அடிப்படைவாதி எனவும், நாள் முழுவதும் அளவுக்கு அதிகமாக வழிபாடு செய்வார் எனவும், பெண்களுடன் கை குழுக்க மாட்டார் என்பதும் தெரிய வந்திருக்கிறது..

அவர் ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்தில் அமெரிக்கா இதை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘இதன் பின்னணியில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என எச்சரித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகன்ல ஹீரோ.. ஆனா ஜனநாயகத்துக்கு வில்லன் விஜய்.. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!...