கம்யூனிஸ்ட் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை!.. கோபத்தில் தவெக அமைச்சர்கள்!..
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் அந்த கட்சியின் ஆட்சி அமைய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளது. அதேநேரம் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. அதாவது வெளியிலிருந்து ஆதரவு கொடுத்திருக்கிறது.
அதனால்தான் தவெகவின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட திமுகவை போல கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனங்களை முன் வைக்கின்றன. இதை தவெக ரசிக்கவில்லை, அதனால்தான் ‘கடந்த திமுக ஆட்சியில் அவ்வளவு ஊழல் நடந்ததே.. கம்யூனிஸ்ட் தோழர்கள் அதுபற்றி பேசினார்களா?’ என ஆதவ் அர்ஜுனா கோபத்தை காட்டியிருந்தார். அதேபோல், ‘கடந்த திமுக ஆட்சியில் ஜெம் கிராணைட்ஸ் வீரமணி விவாகரத்தில் கம்யூனிஸ்டுகள் அமைதியாக இருந்தது ஏன்?’ என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்தார்..
ஒருபக்கம் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள். இதுவும் தவெகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இனிமேல் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவு நமக்கு தேவையில்லை என்கிற முடிவுக்கு தவெக வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சட்டமன்றத்தில் தற்போது எம்.எல்.ஏக்களின் தற்போதைய பலம் 227 இடங்கள். அதில் பெரும்பான்மை எண்ணிக்கையான 114 எங்கள் கூட்டணிக்கு ஏற்கனவே இருக்கிறது. இடைத்தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம். கம்யூனிஸ்ட்களின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை’ என சில தவெக அமைச்சர்கள் நினைக்கிறார்களாம்.