1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. private bus association announced strike from tomorrow

பெண்களுக்கு இலவசம்!.. நாளை முதல் பஸ் ஓடாது!. தனியார் பேருந்து சங்கம் அறிவிப்பு...

private bus
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் வெற்றிப் பயணத் திட்டம் என்கிற பெயரில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பெண்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில்தான், தனியார் பேருந்துகளிலும் வெற்றிப்பயண திட்டத்தை செயல்படுத்த கோரி நாளை நள்ளிரவு முதல் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனைகளை தனியார் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும், அதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் தங்கராஜ் பேட்டி அளித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
AI படுத்தும் பாடு!.. ஐடி ஊழியர்களை விட அதிகம் சம்பாதிக்கும் எலக்ட்ரீசியன்கள்!..