1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan Says Naming Vijay as PM Candidate Reflects Supporters' Enthusiasm

விஜய்யை பிரதமர் வேட்பாளர் எனகூறுவதற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்: திருமாவளவன் விளக்கம்!

thiruma vijay
தமிழக முதல்வர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகச் சித்தரித்து வருவது தொண்டர்களின் ஆர்வமிகுதியே தவிர, அது தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.
 
சமூக வலைத்தளங்களிலும் தவெக அமைச்சர்கள் சிலரிடமும் இதுகுறித்த பேச்சுக்கள் எழுந்துள்ள நிலைப்பாடு குறித்து பேசிய அவர், எந்தவொரு அரசியல் கட்சியின் தொண்டர்களுக்கும் தங்கள் தலைவர் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பான ஒன்றுதான் என குறிப்பிட்டார். தொண்டர்கள் வெளிப்படுத்தும் இத்தகைய கருத்துகளை ஊடகங்களும் சில தரப்பினரும் ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அவர் விமர்சித்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ள சூழலில், தேர்தலின் போதுதான் தேசிய அளவிலான கூட்டணிகள் மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்த முடிவுகளை அரசியல் கட்சிகள் எடுக்கும் என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார். 
 
எனவே, தற்போதைக்கு விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து விவாதிப்பது காலப்பொருத்தமற்றது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜென் ஸீ பெண்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்! ராகுல் காந்தி அழைப்பு..