இடைத்தேர்தல்!.. திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை!. செந்தில்பாலாஜியை கழட்டிவிட்ட ஸ்டாலின்!...
வருகிற அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் அந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டதால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கைவிட்ட திமுக இந்த இரண்டு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பட்டு வருகிறது..
எனவே அந்த இரண்டு தொகுதிகளிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள செந்தில் பாலாஜிக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
திமுகவின் கொங்கு முகமாக பார்க்கப்பட்ட செந்தில் பாலாஜியை அழைக்கவில்லை என்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்தது முதலே செந்தில் பாலாஜியை குறி வைத்து அட்டாக் செய்து வருகிறது. சமீபத்தில் சட்டசபையில் விஜய் செந்தில் பாலாஜி கரூர் பற்றி பேசியிருந்த நிலையில்தான் தற்போது செந்தில் பாலாஜியை முக ஸ்டாலின் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.